மங்கையர்குல மாணிக்கங்கள்

Image

 ஏழுதியவர் : ஆர். பொன்னம்மாள்           வீலை: ரூ 120/-

ஜயதேவரின் பத்தினியான பத்மாவதியிடம் கிரௌஞ்ச ராணி ”கற்புத்தீயால் காமுகனான வேடனை எரித்தாள் தமயந்தி என்கிறீர்கள். இப்போதும் அப்படிப்பட்ட பதி விரதைகள் இருக்கிறார்களா?” என்ற வினாவை எழுப்புகிறார் சதி பத்மாவதி. எத்தனை பேர் என்று வகைப்படுத்தியிருக்கிறார் மங்கையர் குல மாணிக்கங்களின் ஆசிரியை.

நாளுக்கு நாள் பெருகிவரும் விவாகரத்துக்களைத் தடுக்க இது போன்ற நூல்களைத் திருமணப் பரிசாக கொடுப்பது தம்பதிகளை வாழ்த்துவதற்க்கும் மேலானது.

இந்நூலில் திருமணமே செய்து கொள்ளாத ஔவையும் இடம் பெற்றுள்ளார். நாட்டுப் பற்றையும், தமிழையும், பொது நல சேவையையும் உயிராகக் கொண்டு வாழ்ந்தவர் ஔவை. ஸதி என்ற பெயர் தாட்ஷாயணிக்கு உண்டு. பெற்ற தந்தையே கணவனைக் கீழ்த்தரமாகப் பேசிய போது ”யாகம் அழியட்டும்” என சாபமிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட தேவி சதி. இதில் இடம் பெற்றிருக்கும் எல்லோருமே தேவிகள் தான்! பாரத நாட்டுக்குப் பெருமை சேர்த்த மாதரசிகள் இவர்கள். மணிமேகலை பசிப்பிணி தீர்த்த அன்ன பூரணியாய் திகழ்கிறாள். அங்கவை-சங்கவைக்கு திருமணம் செய்து வைக்க அயராது பாடுபட்ட ஔவை திருமணஞ்சேரியிலுள்ள அம்பிகையின் சக்தி பெற்றவராய் விளங்குகிறார். பனைமரத்துண்டை நட்டு, உடனே அது பனை மரமாகி, பூத்துக்காய்த்து, மூன்று கனிகளையும் தந்த அதிசயத்தை நிகழ்த்திய தேவியாய் காட்சி தருகிறார். பேயைப் பாடியே போகவைத்த போது துர்க்கை யாகிறார்.

இராவணன் மனைவி மண்டோதரியும், இந்திரஜித்தின் பத்தினி சுலோசனாவும் தங்கள் கற்பை நிரூபித்த விதம் மெய்சிலிர்க்கச் சொல்லப்பட்டிருக்கிறது. ரஜபுதன பத்மினி, இந்துமதி, சுரசுரி, ஏகாவலி, ஹேமலதை ஆகியோரின் வரலாறும் அதிகம் அறியப்படாதது. ஸ்வயம் பிரபா இராமாயண காலத்துப்பத்தினித் தங்கம். சீதையைத் தேடி குகைக்குள் நுழைந்த அனுமான், அங்கதன், ஜாம்பவான் முதலான வானர சைன்யங்களின் பசியையும், தாகத்தையும் தீர்த்து தன் மந்திரத்தால் சமுத்திரக் கரையில் நிறுத்தியவள். அவள் உதவியில்லாவிடில் ஹனுமன் இலங்கைக்குப் போய்கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றுவர முடிந்திருக்குமா? வண்டிக்குக் கடையாணி போன்ற அவள் உதவியை மறக்கக் கூடுமா?

ஒரு வேடக்காரனைப் பெறக் கூடாதென்று கல்யாணத்தையே தியாகம் செய்த சபரியும் இதில் உண்டு. அதனாலேயே அவளது எச்சில் கனிகளை விரும்பி உண்டார் ஸ்ரீராம பிரான்.

சீதையில் தொடங்கி யமனோடு வாதிட்ட சாவித்திரி, சூரியனையே உதிக்காமல் செய்த நளாயினி, தீயில் பிறந்த திரௌபதி, மூம்மூர்த்திகளையும் குழ்ந்தைகளாக்கி உணவூட்டிய அனுசூயை, அசுவினி தேவர்களுக்கிடையே கணவனை அடையாளம் கண்ட சுகன்யா, இந்திரனால் மோசம் போன அகலிகை, வசிஷ்டரின் பத்தினியான அருந்ததி, ஜயதேவரின் துணைவியான பத்மாவதி, வேடனை எரித்த தமயந்தி, கோகர்ணத்தில் பதியோடு அலைந்த மதயந்தி, துஷ்யந்தனை காந்தர்வ விவாகம் செய்து கொண்ட சகுந்தலை, செடியாய் இல்லங்களில் பூஜிக்கப்படும் பிருந்தா(துளசி) பரசுராமரால் சிரம் கொய்யப்பட்ட ரேணுகா, திருவள்ளுவரின் பத்தினி வாசுகி, மிஸ்ரின் பிரம்ம சூஸ்திரத்துக்கு உதவியாயிருந்த பாமதி, காவேரியாய் சோழ நாட்டை வளப்படுத்தும் லோபா முத்திரை, பாண்டியனுக்குப் பாடம் கற்பித்த கண்ணகி, வாலியின் மனைவியான தாரை, தீயினாலும் தீண்ட மூடியாத ஆதிரை, சர்ப்பயாகத்தை நிறுத்திய அஸ்தீகரின் தாயான ஜரத்காரு, காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து நாகப்பட்டினம் வரை காவிரியிடம் இறைஞ்சியபடி ஒடி வந்த ஆதிமந்தி, ஆட்டனத்தியின் சுக வாழ்வுக்காக உயிர் துறந்த மருதி, மகாலட்சு‌மி – விஷ்ணுவின் புதல்வனான ஏகவீரனை மணந்த ஏகாவலி, கணவன் கேட்டு ‘இல்லை யென்பதா’ என ஈசனை வேண்டி மாங்கனி வரவழைத்த புனிதவதி, ஸ்ரீராமனை ஈன்றெடுத்த கௌசல்யா தேவி, இரு மைந்தர்களையும் ஸ்ரீராமனுக்கும், பரதனுக்கும் துணையாக அர்ப்பணித்த சுமித்திரை, அரிச்சந்திரனின் சத்திய சோதனையில் சமபங்கு ஏற்ற சந்திரமதி, நாககன்னியாரிடமிருந்து புருஷனை மீட்ட இந்துமதி என்று புத்தகத்துக்குக் கனம் சேர்த்த பதிவிரதைகள் படிப்பவர் மனதை கொள்ளையடிக்கிறார்கள். கதைக்குள் கதை, ஏராளமான விஷயங்கள். சம்பவத்தைக் கண்முன் நிறுத்தும் சித்திரங்கள் என 288 பக்கங்களும் வரிக்கு வரி விருந்து. பாராயணம் செய்தால் உண்டாகும் பலன்களும் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது,

Mangayarkula Maanikkangal - BackCover

Advertisements
This entry was posted in மங்கையர்குல மாணிக்கங்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s